என் பேரன் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் – சுகாசினியின் மகன் நந்தன். இவர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து நந்தனின் தாத்தாவான சாருஹாசன் அவர்கள் கூறுகையில், ‘ என் பேரன் நந்தன்  வந்தால், தாத்தா என என்னை தான் பார்க்க வருவான். இப்பொது அவன் வந்து 10 நாளாச்சு. முகத்தை கூட பார்க்கவில்லை. கஷ்டம்தான். ஆனால், கொரோனாவை விரட்டியடிக்க இது தேவைதான்.’ என  கூறியுள்ளார்.