நான் உயிரையா கேட்டன், லெமன் தானே கேட்டன்!

இன்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கருப்பு வெள்ளை திரையுலகினராக மாறுகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே சண்டைகளும் வாக்குவாதங்களும் நான் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு மிக சுவாரசியமாகவும் அன்புடனும் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கருப்பு வெள்ளைத் திரை உலகை நினைவு கூர்ந்து பழைய காலத்தில் உள்ள கதாபாத்திரங்கள் போல நடித்து காட்டுகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகர்களின் பேச்சுவழக்கு உடன் தொடர்ச்சியாக நடித்து வருகின்றனர். அதிலும் சனம்  நான் உயிரையே கொடுக்கலாம் என்று இருந்தேன் என்று பாலாவிடம் சொல்லும் பொழுது நான் உயிரையா கேட்டேன் லெமன் தானே கேட்டேன் என நக்கலாக கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal

Leave a Comment