ராணி வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – நயன்தாரா!

ராணி வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண்மணியும், சிவகங்கையை ஆண்ட வீரமங்கையுமாகிய வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. வரலாற்று படங்கள் என்றாலே தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இயக்குனர் சுசி கணேசன் அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கையை வரலாற்று  உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கவுள்ள இந்த திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், அது நயன்தாராவாக இருக்கலாம் எனவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், தற்பொழுது தான் அந்த படத்தில் நடிக்கவில்லை எனவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை,

nayanthara

author avatar
Rebekal