உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!

Default Image

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார்.

இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மணிகண்டன்  தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால், அவரது உடலிலும் தீ பிடித்ததால் அவரால் அணைக்க முடியவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் இவ்வாறு அபிராமி செய்துகொண்டுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube