மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது..! உயிரிழந்தால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்..!- சென்னை மாநகராட்சி

மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல். 

சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி ஓயக்குவோர் மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது. திறந்தவெளி நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் உயிரிழக்க நேரிட்டால் 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும். வீட்டு உரிமையாளர், லாரி உரிமையாளர் ஆகியோர் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று  சென்னை மாநகராட்சிஅறிவுறுத்தியுள்ளது.