தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி!

விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடத்துகின்றனர். மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

காந்தி ஜெயந்தி அன்று (அக்.2) மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது காரணமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாகவும் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

இதனைத்தொடர்ந்து,  அக்.11-ம் தேதி இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கட்சிகள், 13-க்கு மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மனிதசங்கிலி 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுவதாக திருக்கழுக்குன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment