விண்ணில் சீறி பாயும் ஜெட்கள்…பதற வைக்கும் ஃபைட்டர் படத்தின் டீசர்.!

விண்ணில் சீறி பாயும் ஜெட்கள்…பதற வைக்கும் ஃபைட்டர் படத்தின் டீசர்.!

fighter teaser

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள “ஃபைட்டர்” படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். Viacom18 Studios, மம்தா ஆனந்த், ரமோன் சிப் மற்றும் அங்கு பாண்டே ஆகியோர் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர் இசையமைத்துள்ள இப்படம் 3டி-லும் வெளியாகவுள்ளது.

ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் 2024 ஜனவரி 25-ல் ரிலீசாக உள்ளது. தற்பொழுது, படத்தின் டீசர் வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

டீசரில் வரும் திகைப்பூட்டும் காட்சிகள் அனைத்தும் பதற வைக்கிறது, எதிர் எதிரே வரும் ஜெட்கள் ஒன்றுக்கொன்று மோதுவது போல் வரும் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல், ஹிருத்திக் ரோஷனின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது, இறுதியில் வரும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் ஏற்படுத்துகிறது.

படத்தின் VFX வேலைகள் நேர்த்தியாக உள்ளன.  பேங் பேங் அண்ட் வார் படத்திற்குப் பிறகு, ஹிருத்திக் ரோஷன் மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இது ரொம்ப ஓவர்! படக்குழுவுக்கு கண்டிஷன் போடும் ராஷ்மிகா மந்தனா?

மேலும் இந்த படத்தில், தீபிகா ஸ்குவாட்ரான் லீடர் மினல் ரத்தோராகவும், ஹிருத்திக் ரோஷன் ஸ்குவாட்ரான் லீடர் ஷம்ஷர் பதானாகவும் நடித்துள்ளனர். அனில் கபூர் குரூப் கேப்டன் ராகேஷ் ஜெய் சிங் ஆக நடித்துள்ளார்.

Join our channel google news Youtube