வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியலையா? வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்..!

வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்றால் வெங்காயத்தை இது போன்று பயன்படுத்தினாலே போதும்.

வீட்டில் பகல், இரவு என பாராது எந்நேரமும் கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது கடித்த உடனேயே வரும் அரிப்பு அனைவருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். அதனை விட இந்த கொசுவால் ஏராளமான நோய்களும் பரவி வருகிறது. அதானாலேயே இரவு நேரத்தில் நிம்மதியான கொசுக்கடியில்லாத தூக்கத்திற்காக பலரும் கொசுவர்த்தி, கொசு விரட்டி வைப்பதுண்டு.

இதனை விட எளிமையாக நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஒரு கொசு கூட வீட்டில் இல்லாமல் ஓட ஓட விரட்ட முடியும். அதற்கு தேவையான முக்கிய பொருள் வெங்காயம். வெங்காயத்தை தோல் உரித்து பின்னர் அதனை உரலில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக நமக்கு தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய், சாம்பிராணி தூள். முதலில் அடுப்பில் தாளிப்பு கரண்டியில் கடுகு எண்ணெயை 2 ஸ்பூன் அளவிற்கு ஊற்ற வேண்டும். இது நன்கு காய்ந்த பின்னர் அடுப்பை நிறுத்தி வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் சாம்பிராணி தூளை சேர்த்து இதனுடன் வெங்காய விழுதையும் சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் இதிலிருந்து ஒரு வித நறுமணம் வீச தொடங்கும். அதனை வீட்டில் கொசு அதிகம் உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் வீட்டில் இருக்கும் அனைத்து கொசுக்களும் வெளியே சென்று விடும். இந்த நறுமணம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் வீட்டில் கொசுவை பார்க்கவே முடியாது. அனைத்தும் வெளியேறி விடும்.

Leave a Comment