அசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி?

அசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி?

Default Image

அசத்தலான மீன் கிரேவி செய்யும் முறை.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன், இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பாதியில் சுவையான மீன் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கட்லா மீன் துண்டுகள் – அரை கிலோ
  • வெங்காயம் – பாதி அளவு
  • மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
  • புன்னை இலை – பாதி அளவு
  • மிளகு – மூன்று அல்லது நான்கு
  • தனியாத்தூள் – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, அந்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். அதோடு மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். மசாலா நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கிரேவி நன்றாக கொதித்து வரும்போது பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் போது இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மீன் கிரேவி தயார்.

Join our channel google news Youtube