சுவையான பேபி இட்லி செய்வது எப்படி?

சுவையான பேபி இட்லி செய்வது எப்படி?

Default Image

சுவையான பேபி இட்லி செய்யும் முறை.

நமது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து கொடுப்பதில், பெற்றோர்கள் கவனம் செலுத்துவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பேபி இட்டலி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பேபி இட்டலி – 50
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை, மல்லி தழை, கடுகு, சீரகம், எண்ணெய் – தாளிக்க

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, மெலிதாக கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

நனறாக புரிந்த பின், இட்லியை சேர்க்க வேண்டும். பின் இதனை மிதமான சூட்டில் வைத்து, நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான பேபி இட்லி தயார்.

Join our channel google news Youtube