சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

Default Image

நாம் நமது வீடுகளில் காய்கறிகளை வைத்து பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய் – 250 கிராம் 
  • சின்ன வெங்காயம் – 15
  • பூண்டு – 10 பல் 
  • பச்சை மிளகாய் – 3 
  • சீரகம் – அரை தேக்கரண்டி 
  • தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி 
  • உப்பு – தேவையான அளவு 
  • கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – தேவையான அளவு 
  • எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

முதலில் தாளிப்பதற்கு, வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். சிறிது நிறம் மாறியதும், அதனுடன் பச்சை மிளாகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். கடைசியாக உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கத்தரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாற்ற வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார். 

Join our channel google news Youtube