சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?

சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?

Default Image

சுவையான நண்டு வறுவல் செய்யும் முறை. 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நண்டு, கனவா, மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், விதவிதமாக செய்து கொடுக்கும் போது அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • நண்டு – கால் கிலோ
  •  சின்ன வெங்காயம் – 15
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 3
  • சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
  • தேங்காயாய் துருவல் – பாதி மூடி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – சிறிதளவு

செய்முறை

முதலில் நண்டை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவல், நான்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து அவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், ஒரு பாத்திரத்தில், தேங்காய் துருவல், சாம்பார் தூள், உப்பு, நண்டு போன்றவற்றை போட்டு நன்றாக கிளறி வாய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதனுள், நண்டை அதனுள் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

Join our channel google news Youtube