சுவையான காலிப்ளவர் பஜ்ஜி செய்வது எப்படி?

சுவையான காலிப்ளவர் பஜ்ஜி செய்வது எப்படி?

Default Image

காலிப்ளவர் பஜ்ஜி செய்யும் முறை. 

மாலை நேரங்களில் நாம் தேநீருடன் சேர்த்து பல உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். அப்படிப்பட்ட செலவுகளை தவிர்த்த, நாமே வீடுகளில் உணவுகளை செத்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் அசத்தலான காலிப்ளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • காலிஃப்ளவர் – கால் கிலோ
  • கடலை மாவு – அரை கப்
  • அரிசி மாவு – கால் கப்
  • மைதா மாவு – 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சூடான எண்ணெய் ஒரு தேக்கரண்டி மேலாக எடுத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பிரித்து வைத்துள்ள காலிபிளவர் பூக்களை மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் இட்டு 2 முதல் 3 நிமிடம் வரை வேக விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதனை பொரிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து  பொறிக்க வேண்டும். இப்போது சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.

Join our channel google news Youtube