சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?

  • தைப்பொங்கலை வெண்பொங்கலோடு கொண்டாடுவோம்.
  • வெண்பொங்கல் செய்வது எப்படி?

நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான விழாக்களை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தமிழர்கள் அனைவருக்குமான ஒரு விழா தைப்பொங்கல். அன்று நாம் விதவிதமான பொங்கல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி – 2 கப்
  • பயித்தம் பருப்பு – 1/2 கப்
  • மிளகு – 2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • இஞ்சி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1
  • முந்திரி பருப்பு – 1 கையளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

பச்சை வாசனை போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அறியாய் நினைக்க கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, ஒரு கப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்துக்  நன்றாக வேக விட வேண்டும்.

நன்றாக வெந்தவுடன், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வறுத்து பொங்கலின் மீது கொட்ட வேண்டும் இப்பொது சுவையான வெண்பொங்கல் தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.