சுவையான வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி?

சுவையான வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி?

Default Image

சுவையான வாழைக்காய் குழம்பு செய்யும் முறை. 

நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கறிகளை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதவிதமான சமையல்கலை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • வாழைக்காய் – பாதி
  • வெங்காயம் – ஒன்று
  • தக்காளி – இரண்டு
  • பூண்டு – 3 பல்
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
  • தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • கடுகு, கருவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க

செய்முறை

முதலில் வாழைக்காயை தோல் சீவி நான்காக நறுக்கி, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொண்டு, பூண்டை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் வாழைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து குலைய வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளற வேண்டும். பின் தேவையான ளவு தண்ணீர் ஊற்றி, வாழைக்காயை நன்கு வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் குழம்பு தயார்.

Join our channel google news Youtube