வெயிலுக்கு இதமான பீட்ரூட் லஸ்ஸி செய்வது எப்படி…? வாருங்கள் அறியலாம்!

வெயிலுக்கு இதமான பீட்ரூட் லஸ்ஸி செய்வது எப்படி…? வாருங்கள் அறியலாம்!

வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக ஏதாவது குடித்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்ன செய்து குடிப்பது? எப்பொழுதும் போல கடையில்  ஐஸ்கிரீம் வாங்கிக் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் காய்கறி அல்லது பழங்களை வைத்து குளிர்ச்சியான பானங்களை நாம் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

பீட்ரூட்டை வெறும் சாறாக எடுத்து குடிப்பதை விட, லஸ்ஸி போல செய்து சாப்பிடுவது அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட, இன்று எப்படி பீட்ரூட்டில் லஸ்ஸி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • சர்க்கரை
  • தயிர்
  • முந்திரி பருப்பு
  • உப்பு
  • தேன்
  • அன்னாசி பழம்
  • ஏலக்காய் தூள்

செய்முறை

வேக வைக்க : முதலில் பீட்ரூட்டை வெட்டி, நன்றாக தோலுரித்து வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அரைக்க : மிக்சி ஜாரில் தயிர், சர்க்கரை, கருப்பு உப்பு, சீரகத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின் இதனுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

லஸ்ஸி : அரைத்து வைத்துள்ள கலவையை குளிர வைத்து எடுத்து கொள்ளவும். பின் நன்றாக கிளறி கிளாசில் ஊற்றி கொள்ளவும். இதன் மீது சிறிதளவு தேன் மற்றும் முந்திரி பருப்புகளை தூவவும். அவ்வளவு தான் அட்டகாசமான பீட்ரூட் லஸ்ஸி தயார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube