கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?

கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?

Default Image

கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே  சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல்  செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

தேவையானவை

  • கருப்பட்டி தூள் – ஒரு கப்
  • அரிசி – ஒரு கப்
  • பால் – மூன்று கப்
  • தண்ணீர் – 3 கப்
  • நெய் – கால் கப்
  • ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
  • முந்திரி – 4
  • உலர்திராட்சை – ஒரு டீஸ்பூன்
  • பாதாம் – 4
  • பிஸ்தா – ஒரு டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 2 கப் பால் சேர்த்து, அரிசி சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து குறைந்த சூட்டில் வைத்து, கம்பி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி கிளறி விட வேண்டும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பின் மீதமுள்ள ஒரு கப் பாலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவை எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்க ஆரம்பித்த பின் எடுத்து வைத்துள்ள  நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி விடவேண்டும். எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவேண்டும். பின் இதனுடன் முந்திரி திராட்சை சேர்த்து கிளறவேண்டும். பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி பொங்கலுக்கு மேலாக தூவி விட வேண்டும். இப்போது சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

Join our channel google news Youtube