உடல் எடையை 2 வாரத்திலே குறைக்க இந்த 5 டிப்ஸை மறக்காமல் செய்து வாருங்கள்.!

உடல் எடையை 2 வாரத்திலே குறைக்க இந்த 5 டிப்ஸை மறக்காமல் செய்து வாருங்கள்.!

Default Image

உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன.

உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும்.

இலவங்க பொடி
உடல் எடைக்கு இலவங்க டீயும் நல்ல பலனை தரும். அதற்கு 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் அரை ஸ்பூன் இலவங்க பொடி,1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் முதலிய மூன்றையும் ஒன்றாக கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் 2 வாரத்தில் 5 கிலோ வரை குறைக்க முடியும்.

தேனும் எலுமிச்சையும்
வெது வெதுப்பான நீரை 1 கிளாஸ் எடுத்து கொண்டு, அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வரலாம். இதை காலையில் குடிப்பதால் கொழுப்புகள் குறைந்து கிடுகிடுவென எடை குறையும்.

இஞ்சி
கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புக்களை வெளியேற்றுவதில் இஞ்சியிற்கு முக்கிய பங்கு உண்டு. இதன் நன்மையை அடைய 1 கப் வெந்நீரில் 1 ஸ்பூன் துருவிய இஞ்சியை 5 நிமிடம் வரை நன்றாக கலக்கி கொள்ளவும். அதன் பின் இதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வந்தால் எடை குறைந்து விடும்.

ஆப்பிள் சிடர் வினிகர்
1 கிளாஸ் நீரில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கொண்டு குடிக்கலாம். இதனை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம். உடல் எடையை சட்டென குறைக்கும் மாயம் இந்த ஆப்பிள் சிடர் வினீகருக்கு உள்ளதாம்.

பார்ஸ்லி
1 கப் பார்ஸ்லி கீரையை எடுத்து மைய அரைத்து கொள்ளவும். இதில் அரை கப் அளவு நீரை சேர்த்து கொள்ளலாம். அதன்பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை நேரத்தில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

Join our channel google news Youtube