சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Amit Shah

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தும் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

இதன்பின், தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், எந்த மாநிலத்தில் அதிகமாக ஊடுருவல் நடக்கிறதோ, அங்கு வளர்ச்சி ஏற்படுமா?, அதனால்தான் முதல்வர் மம்தா பானர்ஜி சிஏஏவை எதிர்க்கிறார். ஆனால், நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம், சிஏஏ சட்டம் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான ஒன்று.

CAA என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து உரையாற்றிய அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜி அதை எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்டார். மேற்குவங்க மாநிலத்தில், ஊடுருவும் நபர்களுக்கு வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகள் வெளிப்படையாகவும், சட்டவிரோதமாகவும் விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இணைய மோசடி.. சட்டவிரோத நடவடிக்கைகள்… 70 லட்சம் மொபைல் நம்பர்கள் முடக்கம்.!

ஊடுருவலை அம்மாநில முதல்வர் மம்தாவால் தடுக்க முடியவில்லை. ஊடுருவல், ஊழல் மற்றும் அரசியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதிகமாக நடந்து வருகிறது. கம்யூனிஸ்டுகளும், மம்தா பானர்ஜியின் அரசும் சேர்ந்து மேற்குவங்க மாநிலத்தை சீரழித்துவிட்டது. தேசிய அளவில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதன் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும். மேற்குவங்கத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றில், இரண்டு பகுதியை பாஜக கைப்பற்றும். இதனிடையே, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு அதன் விதிகளை இன்னும் இறுதி செய்யாததால், CAA சட்டம் இழுபறி நிலையில் உள்ளது. தற்போது அதனை நிச்சயம் அமல்படுத்துவோம் என அமித்ஷா கூறியுள்ளார்.

Join our channel google news Youtube