உலக பெண் குழந்தைகள் தினம்..! இதன் பின்னணி என்ன…?

Default Image

இன்று உலக பெண் குழந்தைகள் தினம். 

கடந்த 2011-ஆம் ஆண்டு, ஐ.நா  சபையால், சர்வதேச பெண் குழந்தைகள்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது.

இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசுகள் பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த நாள் பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டும் நோக்கிலும் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டத்தில் இருந்த அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலையை மாற்றி, தற்போது கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்து பல சாதனைங்களை புரிந்து வருகின்றனர்.

பெண்களால் சாதிக்க முடியாது என்ற எண்ணங்கள் தகர்க்கப்பட்டு, ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லாவற்றிலும் சாதனை புரிபவர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்