இன்று மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம்…!!

Default Image

இன்று பிப்ரவரி 22ம் நாள் மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம். கஸ்துரி பாய் தன் கணவர் ஏற்ற தேசிய போராட்டப் பாதையில் அவருக்கு துணையாக தனது வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்தவர்.. காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட மூச்சுக்குழல் அழற்சி நோயினால் சிறையிலேயே சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்