இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்!

Published by
லீனா

தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுரில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி. இவர் தாயார் பெயர் பெரியாத்தா.

இவர், மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை கற்று தேர்ந்துள்ளார். இவர் 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சாலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. இதனையடுத்து, சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

இதனையடுத்து, ஆங்கிலேயர் போரில் சின்னமலையை வெல்ல முடியாது என அறிந்து, சின்னமலையை கைது செய்து, இவரை ஜூலை 31, 1805-ம் ஆண்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு சென்று போலி விசாரணை நடத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார்.

Published by
லீனா

Recent Posts

டெல்லி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் ‘அந்த’ ஒரு தொகுதி எது தெரியுமா?

டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…

10 minutes ago

கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கிய தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…

36 minutes ago

ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!

ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…

48 minutes ago

ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!

ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…

49 minutes ago

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!

டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…

1 hour ago

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

2 hours ago