வரலாற்றில் இன்று(06.04.2022)..!மனித குல மாணிக்கம் மகாவீரர் பிறந்த தினம் இன்று..!

Default Image

மனித குல மாணிக்கம் மகாவீரர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் சமண மதமும் குறிப்பிடத்தக்கது. இந்த சமண மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். இவர், பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர்  சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின் போதனைகளை பின்பற்றுவோர் அனைவருமே மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இன்று  மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் வர்த்தமானர்.  அவரை அவரது பெற்றோர் சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர். அவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை. மகாவீரருடைய பிறந்த நாளை அவரது தந்தை மிகச் சிறப்புடன் கொண்டாடி மக்களுக்கு பல உதவிகளையும், நன்மைகளையும் செய்து வந்தார். மகாவீரருக்கு எல்லா கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது.
தனது 36-வது வயதில் மகாவீரர் உலக வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளத் துவங்கினார். இவர் 12 ஆண்டு காலம் கடும் தவம் புரிந்தார். பிறகு வர்த்தமானர் நாலந்தா சென்றிருந்தபோது கோசலா என்ற துறவியுடன் 6 ஆண்டுகள் கழித்தார். இருவருக்குமிடையில்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வேறுபாட்டின் விளைவாக இவர் இத்துறவியை பிரிந்து அஜீவிகா என்னும் சமயப் பிரிவினருக்குத் தலைவரானார். துறவறத்தை மேற்கொண்ட பதிமூன்றாவது ஆண்டு ரிஜூபாலிகா நதியின் வடகரையில் அமர்ந்து உயர்ந்த ஞானம் பெற்றார். இதற்குப் பின் இவரை கைவல்யர், எல்லாமறிந்தவர், ஜீனர் (வென்றவர்) மகாவீரர், பெருவீரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
நிர்க்கிரந்தர் என்னும் சமயப் பிரிவிற்கு இவர் தலைவரானார். பிற்காலத்தில் அவர்கள் ஜைனர் (சமணர்) என்றும் ஜீனரின் சீடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மகாவீரர் தான் கண்ட உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்க விரும்பினார். அப்போது அவருக்கு வயது 32. முப்பதாண்டுகள் சமயப் பணியில் ஈடுபட்டு 72-ம் வயதில் தென் பீகாரிலுள்ள பாவா என்னுமிடத்தில் உயிர் நீத்தார். இத்தகைய மனித குல மாணிக்கமான மகாவீரர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert