இன்று நிலவில் தரையிறங்கிய முதல் மனிதரின் பிறந்தநாள்!

Default Image

நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். இவர் ஆகஸ்ட், 5-ம் தேதி, 1930-ம் ஆண்டு ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவில் பிறந்தார். இவர் வான்வெளி பொறியியலாளர், கப்பற்படை விமானி, வெள்ளோட்ட விமானி மற்றும் பல்கலை கழக பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

இவர் தேசிய வானூர்தி ஆலோசனை செயல்குழுவின் அதிவேக விமான நிலையத்தில், வெள்ளோட்ட விமானியாக பணிபுரிந்தார். அதற்கு முன்பு, ஐக்கிய அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் 900-க்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார்.

இவர் 1969-ல் ஜூலை 20-ல் அமெரிக்காவின் அப்போல்லோ-11 விண்கலத்தில்  எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கெலின்ஸ் ஆகியோருடன் இணைந்து பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனின் காலடி வைத்தார். இவரை தொடர்ந்து அல்ட்ரினும் சந்திரனில் காலடி வைத்தார். இவர் சந்திரனின் காலடி வைத்த போது, தனது இடது காலையே முதலில் வைத்தார்.

நீல் ஆம்ஸ்ட்ராங், இருதயத்தின் கரோனரி தமனியில் உள்ள, அடைப்பை சரி செய்வதற்காக இவருக்கு மாற்று பாதை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் திடீரென்று உடலில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 25, 2012-ம் நாள் உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்