வரலாற்றில் இன்று(09.04.2022)..,மக்கள் சேவையாளரான நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம் இன்று..!

Default Image

வரலாற்றில் இன்று மக்கள் சேவையாளரான நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம்.

மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும, கல்வி மற்றும் விளையாட்டை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிய மனிதரான நா.மகாலிங்கம் அவர்களின் பிறந்த தினம் இன்று. இவர் திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும் மற்றும் திருமதி.ருக்மணி அம்மையார் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் நாள் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பெயர் பழனிக்கவுண்டர் ஆவர். இவர்  பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள் ஆகும்.

இவர் தனது பள்ளி கல்வியை பொள்ளாச்சியில் பள்ளிகளில் முடித்தார். பள்ளிக்கல்வியை முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தை பெற்றார். பின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டத்தை பெற்றார். இவர் தனது அத்தை மகள் மாரியம்மாள் அவர்களை 1945இல் மணமுடித்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் பிறந்தனர். மகாலிங்கம் அவரது தந்தை நாச்சிமுத்து அவர்கள் மாட்டுவண்டிகளில் தொழில் தொடங்கி, கார்களாகவும், லாரிகளாகவும், பேருந்துகளாகவும் உயர்ந்து பின் 1931இல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட்(ஏ.பி.டி) என்று தொடங்கிய நிறுவனம், சக்தி குழுமத்தின் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.

21 பேருத்துகளில் தொடங்கிய ஏ.பி.டி நிறுவனம் 1946இல் 100 பேருந்துகளை கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. நாச்சிமுத்து அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி தலைவராகவும் இருந்தவர். 1934இல் நாச்சிமுத்து அவர்கள் மகாத்மா காந்தியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தார். அப்பொழுது காந்தியைச் சந்தித்த மகாலிங்கம் சிறு வயதிலிருந்தே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தவர் ஆவர். இவராது தொழில் வளர்ச்சி மூலம் மக்கள் சேவையை செய்ய தொடங்கினார். மேலும் இவர் கல்வி, மற்றும் விளைய்யாட்டு அனைவருக்கும் கிடைக்க மிகவும் விரும்பி சேவையும் செய்து வந்தார். இத்தகைய அரிய பணியாற்றிய நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்