அன்புக்கு அடையாளமாய் வாழ்ந்து காட்டிய அன்னை தெரசா இம்மண்ணுலகில் உதித்த நாள் இன்று!

Default Image

அன்பு என்பது சொற்களால் வாழ்வதில்லை 

அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது 

செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு 

என தனது வாழ்க்கையில் அன்பை செயல்களால் விளக்கி காட்டியவர் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் ஆகஸ்ட் 26-ம் நாள், 1910-ம் நாள், ஒட்டோமான் பேரரசின் அக்ஸப் என்ற இடத்தில் பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர், துறவற வாழ்க்கையை மேற்கொண்டு, ஒரு அருட்சகோதரியாவே வளம் வந்தார்.

இறக்க தானே பிறந்தோம் 

அதுவரை 

இரக்கத்தோடு வாழ்வோம் 

என்பதை உலகிற்கு விளக்கிய இவர், எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு மையம், இலவச உணவு வழங்குமிடம், ஆலோசனை கூடம் என பல அமைப்புகளை ஏற்படுத்தினார். இவர் 45 வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கும், அனாதைகளுக்கும் தொண்டாற்றினார்.

முதலில் தனது பணியை இந்தியாவில் தொடங்கினார். அதன்பின் இப்பணியை பிற நாடுகளிலும் தொடங்கினார். இவரது இந்த அன்பான செயலால், இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

உன்மேல் அன்பு செலுத்துபவர்களை நேசி 

உன்மேல் கோபம் கொள்பவர்களை 

அதைவிட அதிகமாக நேசி!

சமுகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், இவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் சகித்து கொண்டு, அவர்களையும் நேசித்து வாழ்ந்த அன்புள்ளம் கொண்டவர் தான் அன்னை தெரசா.

பலரின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில், அன்புள்ளம் கொண்ட வீர பெண்மணியாக வாழ்ந்து காட்டிய இவர், பலரது மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். “அன்பு தான் உனது பலவீனம் என்றால், இந்த உலகில் மிகப்பெரிய பலசாலி நீதான்’ என்பது போல் அன்பை மட்டுமே தனது ஆடையாக உடுத்தி, பலரை தனது அன்பால் கட்டி போட்டவர் இவர்.

வெறுப்பது யாராக இருந்தாலும் 

நேசிப்பது நீங்களா இருங்கள் 

என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டி, அன்பின் அடையாளமாக திகழ்ந்த இவர், செப்டம்பர் 5-ம் தேதி, 1997-ம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு, விண்ணுலகம் சென்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்