இன்று சர்வதேச இடது கையாளர்கள் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச இடது கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்த தினம் 1976-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
மொத்த மக்கள் தொகையில், 7 முதல் 10 விழுக்காடு மக்கள் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. ஆனால், இடப்பக்க பழக்கமுள்ளவர்கள் திறமைசாலியானவர்களாகவும், புத்திசாலியானவர்களாவும் இருப்பார்ளாம்.
பெற்றோர்கள் இடக்கை பழக்கமுள்ள குழந்தைகளை, வலக்கை பழக்கத்திற்கு கொண்டுவர முயற்சிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு முயற்சி செய்வதால், பேச்சிலும். பார்வையிலும் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.