இன்று கார்கில் வெற்றி தினம்!
கார்கில் போர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மிகப் பெரிய போராகும். இந்த போர் 1999-ல் மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது ‘விஜய் நடவடிக்கை’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தினமானது கார்கில் வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில், பாகிஸ்தான் படையினர் 200 கி.மீ வரை எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி ஆக்கிரமித்துள்ளனர். இதன் விளைவாக தான் இந்த கார்கில் போர் நடந்தது. இந்த போரானது, உயர்ந்த மலைத்தொடரில், மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடைபெற்ற போராகும்.
இந்த போரில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி, பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்தது. ஆனால், இப்போர் சுமார் 70 நாட்கள் நடந்தது. இந்த போரில் 500-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்திய இராணுவத்தால், திரஸ் பகுதியில் உள்ள, தோலோலிங் மலையடிவாரத்தில், கார்கில் போர் நினைவு சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், விஜய் நடவடிக்கையின் வெற்றியை கொண்டாட ஒரு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆவணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.