ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாற்றப்பட்டது
மார்ச் 11, 1918 – வரலாற்றில் இன்று– ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.
அதற்கு முன்னர் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. 1918 ல் மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய குடியரசின் தலைவர் பொறுப்பேற்ற விளாடிமிர் லெனின் மாஸ்கோவை மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கினார்.