வரலாற்றில் இன்று(29.03.2022)..!இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் இன்று..!

Default Image

இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் வரலாற்றில் இன்று.

பூபுல் செயகர் என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார்.  இவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் 1915ஆம் ஆண்டு  உத்திரபிரதேச மாநிலம் இடாவா எனும் ஊரில் பிறந்தார். இவர், கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் செயல்பட்டவர். இந்தியத் தலைமை அமைச்சர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். தத்துவ அறிஞர் ஜே.கிருட்டினமூர்த்தி, பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்திரா காந்திக்கும் இராஜீவ் காந்திக்கும் பண்பாட்டுத் துறையில் ஆலோசகராகவும் இருந்தார்.

இந்திய மரபுகள் சார்ந்த கலைகளை அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்சு, ஜப்பான் போன்ற நாடுகளில் பயணம் செய்து அங்கு இந்தியக் கலை விழாக்களையும் கண்காட்சிகளையும் நடத்தினார். பின் இவரிடம் நேரு, 1950 ஆம் ஆண்டில் கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கண்டறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அனைத்திந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக் குழுமத்தின் அவைத்தலைவர் ஆனார். 1956 இல் தேசிய நெசவு அருங்காட்சியத்தை நிறுவினார். இந்திய வரலாற்று பண்பாட்டு தொண்டு நிறுவனத்தை 1984 இல் நிறுவினார். இதன் மூலம் நாட்டின் பாரம்பரிய சொத்துக்கள், நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார். இத்தகைய அரும் பணியாற்றிய இவர் மார்ச் மாதம் 29ஆம் நாள் 1997ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்