கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
கவிஞர் கவிஞாயிறு தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள் துரைசாமி – புஷ்பம் அம்மாள். இவரின் துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
மேலும், நமது தமிழ் நாடு அரசு கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. இவர், கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஏழைகளின் நிலையை இவர் துல்லியமாகப் படம் பிடித்து, உலகத்தைத் தாங்குகின்றவன் உழைப்பாளி என்றும், ஆனால் அவன் எதை எதை யெல்லாம் தாங்க வேண்டியிருக்கிறது என்றும், தன் தேவைக்கே ஏழை ஏங்க வேண்டியதாயிருக்கிறது இவ்விழிநிலை மாறப் புரட்சி தேவை என தனது கவிதைகள் மூலம் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…