வரலாற்றில் இன்று!!
சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது
திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கே.காமராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இதே நாளில்(23-01-1957) சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரி ஒன்றிய பகுதியில் தமிழ் அரசு அலுவல் மொழியாக உள்ளது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழ் என்பது பெருமைப்படக்கூடியது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ……