Categories: வரலாறு

வரலாற்றில் இன்று(28.03.2022) வேதாத்திரி மகரிஷி மறைந்த தினம்..!

Published by
Sharmi

அனைவரிடமும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இருந்த வேதாத்திரி மகரிஷி மறைந்த தினம் இன்று.

இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன்,  முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே,  தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான நெசவு தொழிலை செய்யத் தொடங்கினார். 18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பின் அங்கு  சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி. பின் படிப்படியாக உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார்.  வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது யார்? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன என்ற கேள்விகள் அவ்வப்போது அவரது மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். இவரின் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

6 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

8 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

10 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

11 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

12 hours ago