வரலாற்றில் இன்று தான் ரோட்டரி சங்கம் உருவானது….!!
வரலாற்றில் இன்று பிப்ரவரி 23 , 1905 – ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. முதல் ரோட்டரி சங்கம் உருவாக்கியவர் பால் பி ஹாரிஸ் என்பவராவார். மூன்று வர்த்தக நண்பர்களுடன் சிகாகோ நகரில் உள்ள டியர்பார்ன் தெருவில் உள்ள ஹாரிசின் நண்பர் கஸ்டவ் ஈ லோஹிர் என்பவரின் அலுவலகத்தில், பிப்ரவரி 23, 1905 அன்று கூடி சங்கத்தைத் துவக்கினர்.துவக்கத்தில் இவர்கள் ஒருவொருவர் அலுவலகங்களி லும் அடுத்த வந்த வாராந்திர சங்கக் கூட்டங்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டன. எனவேதான் இவ்வமைப்புக்கு Rotary என்னும் பெயர் இடப்பட்டது இதுவே இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளிலும் கிளைகள் துவங்கப் படும்போது “பன்னாட்டு ரோட்டரி சங்கம்” என்று பெயர் பெற்றது. இதன் கிளைகள் இன்று மொத்தம் 164 நாடுகளில் நிறுவப்பட்டு செயற்பட்டு வருகின்றன.