இன்று உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம்…!!
உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம் இன்று 21 மார்ச், 1916 -பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கமருதீன். குழந்தையைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் என்று உலகம் முழுவதும் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவிலும் இவரது கால்படாத முக்கிய நகரங்களே இல்லை. பனாரஸ், சாந்தி நிகேதன் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சங்கீத நாடக அகாடமி விருது முதல் பத்மபூஷண் வரை ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 2001-ல் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.