சாஹீது பகத்சிங் பிறந்த தினம் இன்று செப்டம்பர் 27 ..!
பகத்சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார்.
பகத் சிங் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லயால்பூர் மாவட்டத்தில் பங்கா என்ற இடைத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சர்தார் கிசன் சிங்- வித்தியாவதி ஆவார்கள்.இவர் இரண்டாவது மகன் ஆவார்.இவரது குடும்பம் சிக்கிய குடும்பம் ஆகும்.
பகத் சிங் உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக மாறினார் பகத்சிங்.மேலும் இவர் கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங் ஆவார்.
இது இவருக்கு 111-வது பிறந்த நாள் ஆகும்.