இன்று வரலாற்றில் உலக செஞ்சிலுவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சேவை என்பது இந்த உலகில் யாரிடமும் எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து அந்த தேவையை பூர்த்தி செய்வதே சேவை ஆகும். அந்த சிறப்பான பணியை உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற அமைப்பின் பெயர் ரெட் கிராஸ் என்னும் செஞ்சிலுவை அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் சேவையை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ரெட் […]
இன்று, மே 7, இந்தியாவின் முதல் நோபல் விருது வென்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள். இவர் 1861-ஆம் ஆண்டு மே 7ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாரியில் தேபேந்திரநாத் தாகூர் மற்றும் சாரதா தேவிக்கு மகனாகப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் புரட்சியாளர்களில் ரவீந்திரநாத் தாகூர் மிக முக்கியமானவர். தனது இலக்கிய படைப்புகள் மூலம் இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்பியவர். இந்திய நாட்டில் ஜன கன மன போல, இவர் […]
வரலாற்றில் இன்று மக்கள் சேவையாளரான நா.மகாலிங்கம் அவர்கள் பிறந்த தினம். மக்கள் சேவையாளரும், அரசியல்வாதியும, கல்வி மற்றும் விளையாட்டை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிய மனிதரான நா.மகாலிங்கம் அவர்களின் பிறந்த தினம் இன்று. இவர் திரு.நாச்சிமுத்து கவுண்டருக்கும் மற்றும் திருமதி.ருக்மணி அம்மையார் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் நாள் பிறந்தார். நா.மகாலிங்கம் அவரது தாத்தா பெயர் பழனிக்கவுண்டர் ஆவர். இவர் பொள்ளாச்சியின் ஊர்க்கவுண்டராக விளங்கியவர். நா.மகாலிங்கம் அவரது பாட்டியின் பெயர் செல்லம்மாள் […]
வரலாற்றில் “வந்தே மாதரம்” என்ற சொல்லை உருவாக்கிய தேச பற்று மிக்கவரான சட்டர்ஜி மறைந்த தினம். வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்தியாவில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கமாகவே அந்த மந்திரம் இருந்தது. அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் குரல் என்றே சொல்லலாம். அந்த மந்திர சொல் ”வந்தே மாதரம்” என்பது ஆகும். இந்த வந்தே மாதரம் உருவான வரலாறு குறித்து பார்க்க இருக்கிறோம். ஒருமுறை கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த […]
மனித குல மாணிக்கம் மகாவீரர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் சமண மதமும் குறிப்பிடத்தக்கது. இந்த சமண மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். இவர், பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின் போதனைகளை பின்பற்றுவோர் அனைவருமே மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட […]
இந்திய பெண் எழுத்தாளர் பூபுல் செயகர் மறைந்ததினம் வரலாற்றில் இன்று. பூபுல் செயகர் என்பவர் இந்தியப் பெண் எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார். இவர் செப்டெம்பர் மாதம் 11ஆம் நாள் 1915ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் இடாவா எனும் ஊரில் பிறந்தார். இவர், கிராமியக் கலைகள், கைத்தறிகள், கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் ஆர்வத்துடன் செயல்பட்டவர். இந்தியத் தலைமை அமைச்சர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டு இருந்தார். […]
அனைவரிடமும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இருந்த வேதாத்திரி மகரிஷி மறைந்த தினம் இன்று. இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன், முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே, தன்னுடைய சொந்த ஊரில் […]
இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம் வரலாற்றில் இன்று. இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் […]
தண்ணீர்தான் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில் ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க […]
கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் ஆவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் […]
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். இவருடைய பெற்றோர் துரைச்சாமி-குஞ்சம்மாள் ஆவர். இவர் தனது தொடக்க கல்வியை சேலத்திலும், பின் ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே இவர் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகவும் ஈர்க்கப்பட்டார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை தனது […]
சுஜாதா என்று அழைக்கப்பட்ட ரங்கராஜன் மே மாதம் 3ஆம் தேதி, 1935ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்து தன்வசப்படுத்திய ஆற்றல்மிக்க கலைஞராவார். திருவரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, பின், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை […]
கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை, முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி.சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர், லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும் கற்றுக்கொண்டார். பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார். இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை […]
இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் என பல்வேறு பொறுப்புகளை வகித்த இரா. சம்பந்தன் அவர்கள் பிப்ரவரி 5, 1933ம் ஆண்டு பிறந்தார். இவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். இதனால், சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் […]
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நாள் உலக சதுப்பு நில நாள் என்பதாகும். உலக மக்கள் அனைவரும் சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள், இன்றைய நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது. சதுப்பு நிலம் என்பது, உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி […]
இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள். பிப்ரவரி 1, 2003 அன்று விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது இறந்தார் கல்பனா சாவ்லா. இந்தியாவின் பஞ்சாபில் இவர் பிறந்தார். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு குடியுரிமை வாங்கினார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது […]
மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர். இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை […]
இந்திய குடியரசு தினம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது தேசியக் கொடி, மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவும் தான். இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் நம் நாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் மிகவும் அவசியமானதாகும். உலகிலுள்ள மக்கள் யாவரும் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றி செல்ல அவரவர் நாடு […]
இந்தியாவில் உள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக இந்திய அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கம் வாக்களிப்பது என்பது மக்களது முக்கியமான கடமையாக நினைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும். இந்திய குடிமக்களுக்கு 18 வயது நிரம்பினால் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை இந்தியா முழுவதும் கொண்டாடுவதன் நோக்கம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது ஆகும். பாலின சமநிலையை மேம்படுத்துவது. பெண் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை உறுதி செய்வது போன்றவை முக்கிய நோக்கங்கள் […]