ஜனவரி 6 ஆம் தேதி…!இன்று சர்வதேச வேட்டி தினம்…!!

Default Image

உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.

Image result for சர்வதேச வேட்டி தினம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உயரத்தில் குறைந்தவர்தான்.   2014 ம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி வந்த நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சென்னை கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும்  கிளம்பியது. தமிழகத்தில் ஓட்டல்கள், கிளப்கள் அனைத்தும் வேட்டி கட்டி வருபவர்களை அனுமதிக்காவிட்டால்  அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையிலும் அப்போதைய கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் IAS அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் வேட்டி தினம் கடைபிடித்து ஊழியர்களும் மாணவர்களும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களை ஆதரிக்கவேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதினார். குடும்ப விழா, கோவில் விழா, நாம் வழக்கமாக கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற திருநாட்களில் வேட்டி உடுத்திக் கொள்வதையே பெருமையாக கருதுகின்றோம். வேட்டி கட்டுவதில் உள்ள சில சவுகரியங்கள் பிற உடைகள் அணியும்போது கிடைக்காது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் கூட நம்முடைய வேட்டியைக் கட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்