பிப்ரவரி 28-ம் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது…!!
தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது.
அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் இந்திய அரசாங்கத்தாலும் மக்களாலும் கொண்டாடப்படுகிறது.