வரலாற்றில் இன்று(05.03.2020)… மகளீருக்கு மகத்தான திட்டங்களை வகுத்துக்கொடுத்த மனிதரின் பிறந்த தினம்..

மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் எனும், ஊரில் மார்ச் மாதம், 5ஆம் தேதி, 1959 அன்று பிறந்தார். பின் இவர், சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர். பின், 1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்தார். இவர், இந்திய அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார்.பின் படிப்படியாக அரசியலில் உயர்ந்த இவர்,
- தனது 16 வயதில், மாடல் மேல்நிலைப்பள்ளி மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பின், 2004லில் ஷிவ்ராஜ் சிங் 5வது முறையாக வெற்றிபெற்று 14 வது மக்களவைக்கு தேர்வானார்
- பின், 2005 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
- நவம்பர் 29, 2005 அன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பின், 1990 ல் தனது அரசியல் பயணம் தொடங்கிய புத்னி தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றார்.
- அடுத்த சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜகாவை வெற்றி பாதைக்கு அழைத்துசென்ற சிவ்ராஜ், டிசம்பர் 12 2008 அன்று மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
- மத்தியபிரதேசத்தில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்த சிவ்ராஜ், மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். மேலும் அம்மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றியவர் என பெயர்பெற்றார்.
- பெண்கள் நலம் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர்பெற்ற திட்டங்களை இவர் செயல்படுத்தினார்.அதில்,
- கான் கி பேட்டி யோஜனா,
- ஜனனி சுரக்ஸா ஏனம் ஜனனி பிரசாவ் யோஜனா,
- ஸ்வகதம் லக்ஷ்மி யோஜனா,
- உஷா கிரன் யோஜனா,
- தேஜஸ்வினி,
- ஒன் ஸ்டாப் கிரிசிஸ் சென்டர்,
- லாடோ அபிவான், போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தி செயல்படுத்தினார். குழந்தைபருவத்தில் நர்மதை ஆற்றில் விளையாடுவதிலும் நீச்சல் அடிப்பதிலும் அதிக நேரத்தை செலவளித்த இவருக்கு நர்மதை ஆற்றின் மீதான அலாதி பிரியம் காரணமாக அதன் சூழலை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்துள்ளார்.இத்தகைய பல திட்டங்களை வகுத்துக்கொடுத்த இவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025