நம்மை உலகிற்கு காட்டிய அன்னைக்கு உலகமே கொண்டாடும் அன்னையர் தினம்….வாழ்த்துவோம் வளம் பெறுவோம்…..
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை உலகமே அன்னையர் தினமாக கொண்டாடி வருகிறது.பத்துமாதம் வயிற்றிலும்,ஆயுல் முழுக்க மனத்திலும் சுமக்கும் ஒரே ஜீவன் அம்மா…இத்தகைய பண்புநலண்களை கொண்ட தாயானவளின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாக இது உள்ளது.முந்தைய காலங்களில், பிரசவத்திற்க்கு சென்று திரும்புவோரை மறுபிறப்பு என்று சொல்வது உண்டு.ஏனென்றால் பிரசவ காலத்தில் பெண்களின் இறப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் தற்போது அப்படியில்லை தற்போது உள்ள மருத்துவமுறைகள் பிரசவகால இறப்பினை வெகுவாக குறைத்துள்ளது.பாலூட்டும் கடமையும் உறக்கமில்லாத இரவுகளும் அனைத்து தாய்மார்களும் கடந்து வந்த தருணமாக இருக்கும். அனைத்து தாய்மார்களும் கடுமையான சூழல்களில் வெற்றி பெற்றவர்கள்.தாய்மைக்காலத்தில் பெண்ணுக்கு உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றம் மிகப்பெரியது.
கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் உடல் எடை பெண்ணுக்கு தன் உடல் குறித்த நம்பிகையை குறைக்கிறது.எணினூம் தனது குழந்தைக்கவே அனைத்தையும் இழக்க தயாராகுகிறாள் தாயானவள்.தனது வாழ்வை வாழாமல் தனது கணவன்,குழந்தை என தன் குடும்மத்திற்க்காவே வாழும் இந்த ஜீவன்களை போற்றுவோம்.