மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் …!!
மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் சிட்டுக்குருவி இனம் அழியாமல் காப்பாற்று வதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டு தோறும் மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர்
சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது. செல்போன் டவர்களின் பாதிப்புகளை விட இத்தகைய காரணங்களே சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
டெல்லி மாநில அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது. இந்திய அஞ்சல் துறையும் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டு உள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்திட நாமும் நம்மால் ஆன முயற்சிகளைச் செய்யலாம்.