ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும்.
மார்ச் 15, ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும்.
நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா; நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா; நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. தரம் குறைந்த சாமான்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது குற்றம்.
நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றே கடமைகளும் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்களின் தரம் அவற்றின் விலை மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். ஐ எஸ் ஐ போன்ற முத்திரைகள் உள்ளனவா, பொருட்களின் விலை என்ன, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டுள்ளனவா, அந்தச் சாமான்களின் தயாரிப்பு விபரங்கள், அதில் அடங்கியுள்ள பிற துணைப்பொருட்கள் போன்றவற்றை அறிவதோடு நாம் கொடுக்கும் விலைக்குத் தரும் ரசீதில் வரி உட்பட சரியான விபரங்கள் உள்ளனவா என சரிபார்க்கவேண்டிய பார்க்கும் கடமையும் நமக்கு இருக்கிறது.