இன்று வரலாற்றில் இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த தினம்…!!
மார்ச் 14, 1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ற இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் 1879 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 – ஆம் நாள் ஜெர்மனி நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்று வயது வரை பேசாதவராகவே இருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து யூதர்களை கொடுமைப்படுத்தத் துவங்கியதும் ஐன்ஸ்டின் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார்.
இவரின் புவியீர்ப்பு தத்துவம், சார்பியல் கொள்கை, ஒளிமின் விளைவிற்கு இவர் அளித்த விளக்கம் போன்றவை இவரை அறிவியல் உலகில் பேரரிஞராக அறிமுகம் செய்தது.
அவர் மிக பிரபலமான சமன்பாடான : E = MC ² (ஆற்றல் = நிறை ஒளியின் வேகத்தின் இருமடங்கு). உருவாக்கினார்
1921 – ஆம் ஆண்டு இவரது இந்த கண்டுபிடிப்பான ஒளிமின் விளைவிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.