வரலாற்றில் இன்று– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்…!!
மார்ச் 13, 1940 வரலாற்றில் இன்று– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்கு காரணமான பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார். குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் ஓடாமல் கம்பீரமாக அங்கேயே நின்ற உத்தம் சிங் “என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !” என்று அறிவித்தார்.கோர்ட் படியேறிய பொழுது ,”டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !” என்று உறுதிபடச் சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது “ராம் முகம்மது சிங்” எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் எனப் புரியவைத்தான். ‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாகத் தூக்கு மேடை ஏறினான் அந்த மாவீரன் .