வரலாற்றில் இன்று …!இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்…!
ஜனவரி 3 (1831) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று ஆகும்.
மகாராஷ்ட்ராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் .
இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி
பழமைவாதிகள், அவர் செல்லும் வழியெங்கும் வசை பாடினர்; கற்கள், சாணம், மனித மலம் போன்றவற்றை அவர் மீது எறிந்தனர். அத்தனை தடைகளையும் மீறி சென்று அவர், பெண்களுக்கு கல்வி கற்பித்தார். தொடர்ந்து, பல இடங்களில் கல்வி நிலையங்களை அமைத்தார். ‘பிளேக்’ நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவினார்; அந்நோய் தொற்றியதால், 1897 மார்ச் 10ம் தேதி இறந்தார்.