இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி, முதல் பெண் மருத்துவர் மட்டுமல்லாது, இவர் சமூக போராளியும், தமிழ் ஆர்வலரும் ஆவார். இவர் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராயணசாமி- சந்திரம்மாள் ஆகியோருக்கு முதல் மகளாக, புதுக்கோட்டை, திருகோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரபல வழக்காறிஞரும், தாயார் பாடகரும் ஆவார்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற பழைய பஞ்சாங்கத்தை தகர்த்தெறிந்து, தனது 4 வயதிலேயே கல்வி பயணத்தை தொடங்கிய இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இவர் தனது கல்லூரி படிப்பை தொடருவதற்கு, அவரது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார்.
கல்லூரி பயில்வதற்க்கான எந்த வாய்ப்புகளுக்கு, வசதிகளும் இல்லாத நிலையில், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால், அன்று இருந்த தலைவர்கள் பலரும், பெண்கள் பயில்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்னார் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், எதிர்ப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, அவருக்கு கல்லூரியில் பயில அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து முத்து லெட்சுமி ரெட்டி, 1907-ல் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவக்கல்லூரியில் முதன்முதலில் சேர்ந்த முதல் பெண் இவர் தான். பல வெற்றிகளைத் தன்வசப்படுத்திய முத்துலெட்சுமி ரெட்டி, 1912-ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.
திருமணத்தில் நாட்டம் இல்லாத முத்துலெட்சுமி ரெட்டி, தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக, 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுந்தர்ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராம் மோகன், கிருஷ்ணமூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…