இங்கிலாந்தின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது…!!
வரலாற்றில் இன்று – மார்ச் 4, 1882 – இங்கிலாந்தின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது. அது ஒரு பரிசோதனை முயற்சியே – சோதனை ஓட்டம் .
1883ம் ஆண்டுதான் மின்சார டிராம் எஞ்சின்கள் மூலம் பயணிகள் சேவை துவங்கி நடைபெற்றன.ரயில் வண்டியின் முன்னோடிதான் டிராம் வண்டிகள். தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட பாதையில், குதிரைகள் பெட்டிகளை இழுத்துச் செல்லும். பின்னர் குதிரைகளுக்கு பதில்,. நீராவி இழுவைகள் பொருத்தப்பட்ட டிராம் வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1895-ல் இந்தியாவில் சென்னை நகர வீதிகளில் தான் முதன்முறையாக மின்சார டிராம்கள் இயங்கின.