இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள்….!!
இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.