தோழர் ஈ.எம். எஸ்….. கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று, வரலாற்றை வளைப்பவர்களுக்கு ஒரு சேதி. அதைத் தெரிந்து கொள்ள, கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், புலாமந்தோள் என்ற ஊருக்கு சென்றால் போதும். அங்கே, வானுயர நிற்கும், ஒரு பள்ளி வாசல், கதை சொல்லும். அப்பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு, உங்களோடு பகிர்ந்து கொள்ள, ஒரு, வரலாற்று நிகழ்வு இருக்கிறது. ஈ.எம். எஸ். என்று, வாஞ்சையுடன்,இன்னும் நினைவு கூரப்படும், தோழர் ஈ.எம். எஸ். அவர்களின், முடிவெடுக்கும் திடமும், சிறுபான்மை மக்கள் மீது அவருக்கிருந்த பரிவும் இதோ:மலபார் ரகளை மற்றும் மாப்பிள்ளை ரகளை என்று, வரலாறு கூறும், பிரிட்டிஷ் எதிர்ப்புப் போரில், இஸ்லாமியர்களின், பங்கேற்பை புரிந்து கொண்ட, ஏகாதிபத்தியம், பள்ளி வாசல்களை புனரமைக்கவோ,உயரமாகக்கட்டவோ தடைவிதித்திருந்தது. 1947-ல் சுதந்திரம் கிடைத்தபிறகும் இது மாறவில்லை. 1957-ல் தோழர். ஈ.எம். எஸ். அவர்கள், கேரள மாநில முதல்வர் ஆன பின்பு, மலப்புறம் சென்றார். அப்போது, பூலாமந்தோள், பள்ளி வாசல் நிர்வாகிகளும், இமாமும்,ஈ.எம். எஸ். அவர்களை நேரில், சந்தித்து, “சகாவே, எங்கள் பள்ளியில், ,தொழுகைக்கு வரும், இறைநம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
ஆனால், பள்ளி வாசலை இடித்து புனரமைக்கவோ,உயரமாகக்கட்டவோ அனுமதி கிடைக்கவில்லை.சுதந்திரம் கிடைத்தபின்பு, காங்கிரஸ் அரசுகளும் கண்டு கொள்ள வில்லை, நீங்கள் தான் எதாவது செய்ய வேண்டும் “என்றனர். அதற்கு தோழர் ஈ.எம். எஸ். அவர்கள், ,”நான், நாளை, புகைவண்டியில், திருவனந்தபுரம் சென்று, சட்ட மன்றம் செல்லும் வரை அவகாசம் தாருங்கள் “என்று கூறி விடைபெற்றார். மறுநாள்,ஜூலை மாதம்9-ம் தேதி ,மலப்புறம் மட்டுமல்ல, கேரள மாநிலம் முழுவதும் உள்ள, பள்ளி வாசல்களை புனரமைக்கவும், தேவையான அளவில் உயரமாகக்கட்டிக்கொள்ளவும் அனுமதித்து, அரசு உத்தரவு வெளிவந்தது. இப்போதும், அப்பள்ளிவாசல், ஈ.எம். எஸ். பள்ளி வாசல் என்றும், 1957 பள்ளி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈ. எம். எஸ். நினைவு தினம் இன்று…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…